பிக் பாஸ் 5 எப்போது தெரியுமா ? - வந்தது அறிவிப்பு! ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி!
வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் பிக் பாஸ் - 5 நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்க போகிறது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 5வது சீசன் வெளியாகவுள்ளது. அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
4 சீசன்களுக்கும் இருந்த எதிர்பார்ப்பை விட இந்த சீசனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக தான் உள்ளது. அதுவும் திருநங்கைகள் இருவர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். இதுதான் பிக் பாஸ் வரலாற்றின் முதல் தடவை என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் பல பிரபலங்களின் பெயரும் அடிபட்டு வருகிறது. அதிக மாடல்களை களமிறக்கிய முதல் சீசனும் மூன்றாவது சீசனும் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் இந்த சீசனிலும் பல மாடல்களை களமிறக்கலாம் என்று பிக் பாஸ் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் எப்பொழுது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிகாரபூர்வ தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 3ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.