பிக்பாஸில் இந்த வாரம் கமலுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன்?
‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 22 ஆம் தேதி பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினை அவருக்குப் பதில் வரும் வாரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்திருக்கிறார்.
அவருக்கு அனுபவம் உண்டு என்பதால் தனிமைப்படுத்திகொண்ட கமல்ஹாசன் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.