16 வயசு சின்ன பொண்ணு.. ஏமாற்றி லிப்லாக் பண்ண கமல், நீங்க இதை பேசலாமா? - பிரபலம் ஆவேசம்!
பிரபலம் ஒருவர் கமல்ஹாசன் லிப்லாக் கொடுத்தது குறித்து பேசியுள்ளார்.
கமல் ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். இவர் பல கதாபாத்திரங்களில் பன்முகங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவர் திற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் 90sகளில் நடித்த எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆவார். அந்த சமயங்களில் இவர் நடிகை சிம்ரனுடன் இனைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிரபலம் ஆவேச பதிவு
இந்நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் அளித்த புகாரினால், பெண்களின் பாதுகாப்பு கருதி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அவரின் இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் வருகிறது.
#BiggBossTamil7 #Yugendran wife direct attack on @ikamalhaasan he has no rights to talk about women safety after kissing Rekha without consent #PradeepAntony pic.twitter.com/XMS0YPrfna
— Abhishek (@funkyboss96) November 5, 2023
இதில் பிரபல பின்னணி பாடகர் யுகேந்திரனின் மனைவி மாலினி, கமலின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கமல்ஹாசன் புன்னகை மன்னன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயினான ரேகாவை அவரிடம் சொல்லாமலே லிப்கிஸ் அடித்ததை கூறி, "ரேகா 16 வயதில் இருக்கும்போது அவங்களுக்கு சொல்லாமலே கமல் கிஸ் பண்ணிருக்காரு, அவர் நடிச்ச முக்கால்வாசி படங்களில் லிப்லாக் சீன் இல்லாமல் இருக்காது. தற்போது பெண்களுக்காக பேசுவதாக கூறுவது சுத்தமாக புரியவில்லை" என்று கூறியுள்ளார்.