பிக் பாஸ்-க்கு குரல் கொடுக்கும் அந்த நபர் யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்!

Bigg Boss Vijay Television Viral Photos
By Sumathi Jan 17, 2024 08:45 AM GMT
Report

பிக் பாஸ்-க்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

ஏராளமான ரசிகர்களை கொண்ட பிரபல சின்னத்திரை நிகழ்ச்சி பிக்பாஸ். பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழிலும் இந்த ஷோ கொடிக்கட்டி பறந்து வருகிறது.

bigboss tamil

இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் முடிவு பெற்றது. அதில் மக்களின் மனம் கவர்ந்த அர்ச்சனா டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சியில் குரலுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

வைரல் புகைப்படம்

அந்த குரல் யாருடையது என்று தேடாத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு தனித்துவமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த குரல் யார் என்று தெரியவந்துள்ளது.

sasho-photo

முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வருபரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ. அவருடைய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் குறித்த இதர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.