பாலியல் புகார்!! பிக் பாஸ் விக்ரமனுக்கு எதிராக 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
பாலியல் புகாரில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் மீது சென்னை வடபழனி போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கின் பின்னணி
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த கிருபா முனுசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். லண்டனில் ஆய்வுபட்டம் பெற்றுள்ள இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் விக்ரமன் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கிருபா முனுசாமி அளித்திருந்த மனுவில், பிக்பாஸ் பிரபலமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளருமான விக்ரமனும் தானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம் என குறிப்பிட்டு தன்னை காதலிப்பதாக சொன்ன விக்ரமனிடம் சட்டரீதியாக திருமணமும் செய்துக் கொள்ளும்படி கூறினேன் என்றும் ஆனால் விக்ரமன் மறுத்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
தன்னை காதலிப்பதாக சொல்லியே 13.7 லட்சம் ரூபாய் பணத்தை விக்ரமன் வாங்கினார் என குறிப்பிட்டுள்ள கிருபா, ஆனால் அதில் இன்னும் 1.7 லட்சம் ரூபாய்யை திருப்பி தவில்லை என தனது புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை காதலிப்பதாக சொல்லி மோசடி செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை , எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தனக்கு நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் பரபரப்பான நிலையில் அதனை முற்றிலுமாக விக்ரமன் மறுப்பு தெரிவித்திருந்தார். கிருபாவும் தானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம் என்ற விக்ரமன், இதுதான் உண்மை என்றும் தான் அவரை காதலிப்பதாகவெல்லாம் சொல்லவில்லை என அதிரடியாக தெரிவித்து, நெருக்கமான தொடர்பும் அவருடன் வைக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
13 பிரிவுகளில் வழக்கு பதிவு
மேலும், அவருக்கு தான் எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை என்ற விக்ரமன், அவர் கொடுத்த புகார் தவறானது என்று கூறி இதை தான் சட்டரீதியாக சந்திப்பேன் என கூறியிருந்தார்.
காவல் துறையினர் தான் அளித்த புகாரில் எந்த வழக்கு பதிவும் செய்யாததால் கிருபா நீதிமன்றத்தை நாடினார். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுபடி விக்ரமன் மீது தற்போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்த 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
