காதல் கணவரை பிரிவதாக அறிவித்த பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் மூலம் பிரபலமான வைஷ்ணவி தனது கணவர் அஞ்சானை பிரிவதாக அறிவித்துள்ளார்.
வைஷ்ணவி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் வைஷ்ணவி. RJ-வாக பணியாற்றி வந்த வைஷ்ணவி பிரசாத், பிக் பாஸ் மூலம் பாப்புலர் ஆனார்.
பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தனது காதலர் அஞ்சானை திருமணம் செய்துக் கொண்டார். மூன்று வருட காதல், மூன்று வருட திருமண வாழ்க்கை என 6 வருடங்களை அஞ்சானுடன் கழித்த வைஷ்ணவி, தற்போது தங்களின் பிரிவை அறிவித்துள்ளார்.
விவாகரத்து
இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, “6+ வருடங்கள் ஒன்றாக இருந்த நானும் அஞ்சானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்,
ஆனால் நாங்கள் இருவரும் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்களாக இருக்க, நீண்ட ஆலோசனைக்குப் பின் பிரிவதே சிறந்தது என முடிவு செய்துள்ளோம். எங்களிடம் நிறைய பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆனது.
எங்களுக்காக வருந்தாதீர்கள்
என்ன நடந்தது என யூகிக்கும் அனைவருக்கும், எங்களுக்குள் எதுவும் மோசமாக நடக்கவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள், ஏனென்றால் நாங்கள் பிரிந்ததற்கு வருந்தவில்லை. அஞ்சானும் நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம்.
பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற இந்த முடிவை யோசித்து எடுத்தோம். ஏனெனில் அதுவே எங்களுக்கு சிறந்தது. மேலும் நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது.