பிக்பாஸ் தாமரையா இது, ஆளே மாறிவிட்டாரே : வைரலாகும் வீடியோ

By Irumporai May 18, 2022 04:42 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் 105 நாட்கள் ஒளிபரப்பாகிய இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் தேர்வானார், அடுத்து இடத்தை பிரியங்கா பிடித்தார்.

மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. கணவர், குழந்தையை தாண்டி அம்மா, சகோதரிகளையும் அவர் தான் கவனித்து வருகிறார்.

பிக்பாஸ் தாமரையா இது,  ஆளே மாறிவிட்டாரே  : வைரலாகும் வீடியோ | Bigg Boss Thamarai New Getup Change

பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட அவர் அனைவருடனும் நன்றாக போட்டிபோட்டு விளையாடி வந்தார். அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்ற அவர் கடைசியில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் ஜோடியாக களமிறங்கியுள்ளனர்.

எப்போதும் புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ம தாமரையா இது என பார்த்து வருகிறார்கள்.