பல வருடங்களுக்கு பின் முதல் கணவரின் மகனை சந்தித்த தாமரை - ஃபோட்டோஸ் வைரல்
தாமரை தன் முதல் மகனை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த போது எடுத்த ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.
தாமரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் வெகுளித்தனமான பேச்சின் மூலம் மக்களின் மனதில் இடம் பெற்றார் தாமரை. இவர் ஒரு நாடக கலைஞர். ஆரம்பத்தில் போட்டியில் புரிதல் இல்லாத தாமரை, நாளடைவில் டஃப்பான போட்டியாளராக பேச பட்டார். எந்த ஒரு புகழும் பெயரும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை சம்பாதித்து இறுதி கட்டத்தை நெருங்கியவர் தாமரை.
இவர் வெற்றிப்பெற வேண்டும் என்று பலரும் விரும்பினர். ஆனால் ராஜு தான் அந்த சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் தன் கனவருடன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலிலும் தாமரை நடித்தார்.
மகனுடன் சந்திப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் தன் மகனை பார்த்து பல வருடம் ஆனதாகவும், அவரை புரிந்து கொண்டு அவருடன் வந்து இனைய வேண்டும் என்று கண்ணீர் விட்டு கூறினார். இந்நிலையில், சமீபத்தில் அவரை சந்தித்த தாமரை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பல வருடங்கள் கழித்து தன்னுடைய மகனுடன் இணைந்த தாமரைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.