வந்த முதல் நாளே ஆர்மி.. அசத்தும் பவானியின் புகைப்படங்கள் !

biggbosstamil viralphotos pavni
By Irumporai Oct 03, 2021 07:52 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை பவானி கலந்து கொண்டுள்ளார், இந்த நிலையில் பவனியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பவானி தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் தொடங்கினார் இவர் 2015 இல் ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.

மேலும்   2016 ஆம் ஆண்டில், ஈ.எம்.ஐ-தவனை முறை வாழ்க்கை படத்திலும் நடித்திருந்த பவானி, 2017 ஆம் ஆண்டில், சின்ன தம்பி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்தார் .

2018 ஆம் ஆண்டில், அவர் மாற்றப்படுவதற்கு முன்பு மலையாள மொழி தொலைக்காட்சி தொடரான நீலகுயில் நடித்தார் 2019 ஆம் ஆண்டில், அவர் ராசாத்தி தொலைக்காட்சி தொடரில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர், தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார் பிக் பாஸ் சீசன் 5-ல் சின்னத்தம்பி சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி 8 -வது போட்டியாளராகஅறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் பவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சராசரி பெண்ணாக 23 வயதில் திருமணம் செய்துக் கொண்டு, கணவர், குழந்தை என வாழ வேண்டும் என நினைத்த பாவ்னிக்கு, அது தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் குறிப்பிட்டு, திருமண வாழ்க்கையில் தனக்கு ராசியில்லை என்றார்.    

இந்த நிலையில் தற்போது பிக்பஸ் வந்த முதல் நாளே பவானிக்கு ஆர்மி தொடங்கி விட்டனர் ட்விட்டர் வாசிகள்.