11 பசங்க கூட ஒரே வாடகை வீட்டில்.. அத மட்டும்தான் பண்ணுவாங்க - BiggBoss பூர்ணிமா பகீர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் பூர்ணிமா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி பேசியுள்ளார்.
பிக்பாஸ்
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சர்ச்சை, சண்டை, வாக்குவாதம், அழுகை என நிறைந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அண்மையில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது.
அதில், போட்டியாளர் பூர்ணிமா தனது கதையை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, பூர்ணிமா சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வேலைக்காக வந்திருந்தாராம். வந்த இடத்தில் அவருக்கு தங்குவதற்கு வீடு கிடைக்காமல் இருந்திருக்கிறது.
பல இடங்களில் தான் தேடிப் பார்த்தும் வீடு இல்லாமல் இருந்த நிலையில் தன்னை போலவே 11 ஆண்கள் வீடு தேடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து பூர்ணிமாவும் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார்.
பூர்ணிமா
இது குறித்து பூர்ணிமா கூறுகையில் "எனக்கு அந்த ஆண்களால் எந்த தொந்தரவுமே இல்லை. அவர்களுடன் நான் நிம்மதியாக தான் இருந்தேன். சில நேரங்களில் அவர்கள் சாப்பிடும் பொருள்களை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
அது மட்டும்தான் பிரச்சனை, வேறு எதுவும் இல்லை. ஆனால், நான் அந்த வீட்டிலிருந்ததை அக்கம்பக்கத்தினர் தவறாகப் புரிந்து கொண்டார்கள். அதன் காரணமாக ஒரு நாள் போலீசார் என்னிடம் வந்து விசாரித்தனர். என்ன நீங்க இங்கே தனியா இருக்கீங்க? என்று கேட்டார். அப்போது நான் என்னுடைய சூழ்நிலையை பற்றி சொன்னேன். நான் வேலை பார்க்கும் இடத்தையும் சொன்னேன்.
அதன் பிறகு போலீஸ் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்திருக்கிறார். அதில் ஒரு சிலர் என் மீது தப்பில்லை எனச் சொன்னதை கேட்டு போலீஸ் என்னை விட்டு விட்டார்கள். இதனையடுத்து என்னுடைய அப்பா, அம்மாவுக்கு போன் பண்ணி இப்படி 11 ஆண்களோடு ஒரு பெண் இருப்பது சரி இல்லை என்று கூறியுள்ளனர். அதற்கு பிறகு தான் நான் அந்த ரூமை காலி செய்து விட்டு என்னுடைய ஆபீஸ்லையே தங்கியிருந்தேன்" என்று அவர் பேசியுள்ளார்.