பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இல்லையா ? அவருக்கு பதில் யார்? வெளியான பரபரப்பு தகவல்
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகச்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.