‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ - கொளுத்திப்போட தயாரான பிக்பாஸ் ப்ரோமோ

kamalhassan BIggboss biggbossseason5
By Petchi Avudaiappan Sep 03, 2021 08:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன் முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின்5வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் அறிமுக ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விரிவான ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை மையமாக வைத்து பிக்பாஸ் காட்சிகள் ஒப்பிடப்பட்டுள்ளன.

ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்டுலயே இவ்வளோ கலாட்டா இருக்கும் போது, வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர்பாருங்கள். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் என்று கமல் பேசும் வசனத்துடன் முடிவடையும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.