கூடவே இருந்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..? பிக் பாஸ் ஷெரீனுக்கு நேர்ந்த சோகம்
பிக் பாஸ் புகழ் ஷெரீனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷெரின்
பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஷெரின். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கிய "விநோதய சித்தம்" படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஷெரின் புகார் ஒன்றை அளித்தார். அதில், ஷெரினாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக், அவரது நண்பர்கள் போன் மூலம் ஷெரினாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பாலியல் தொல்லை
மேலும், பாலியல் தொல்லையும் தந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஷெரினாவின் ஓட்டுநர் கார்த்திக் அவரது நண்பர் இளையராஜா இருவரையும் மயிலாடுதுறையில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணியில், நடிகை ஷெரினா கார்த்திகை வேலையை விட்டு நீக்கியதால், ஆத்திரமடைந்த கார்த்தி, இளையராஜாவுடன் தொல்லை தர முயற்சித்ததோடு, போனில் கொலை மிரட்டல் விடுக்கவும் செய்துள்ளார் என தெரியலந்துள்ளது.