கண்ணீரில் மிதந்த பிக்பாஸ் வீடு - ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

BiggBoss5Tamil suruthi PavniReddy
By Petchi Avudaiappan Oct 26, 2021 09:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டை அடிப்படையாக கொண்டு போட்டியாளர்கள் மீது ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் நமீதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வார எலிமினேஷன் பிராசஸில் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சின்னபொண்ணு, அபிநய், பாவனி, இசைவாணி, அக்‌ஷரா, வருண் உட்பட பலரும் உள்ளனர். 

இதனிடையே நேற்று ஒளிபரப்பான எபிசோட் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பஞ்ச தந்திர டாஸ்கில் தாமரைச்செல்வி காயின் ஒன்றை கைப்பற்றினார். இதனை சுருதியும், பாவனியும் இணைந்து தாமரை உடை மாற்றும் நேரத்தில் தூக்க வீடு ரணகளமானது. 

[EVQFFI

உடை மாற்றும் அறைக்குள் நம்பி உள்ளே விட்டதற்கு சுருதியும், பாவனியும் துரோகம் செய்ததாக தாமரை விமர்சிக்க, கடுமையான வார்த்தைகளை சொல்ல வேண்டாம் என பதிலுக்கு இருவரும் மல்லுகட்ட மற்ற போட்டியாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். சுருதி தாங்கள் காயின் விளையாட்டிற்காக தான் இப்படி செய்தததாக தெரிவித்ததை தாமரைசெல்வி உட்பட மற்ற போட்டியாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

மேலும் தாமரைச் செல்வி உபயோகித்த கடுமையான வார்த்தைகளால் மனமுடைந்த பவானி ரெட்டியும், சுருதியும் கண் கலங்கினர். 

இதனிடையே சமூகவலைத்தளங்களில் #BiggBoss5Tamil பாவனி மற்றும் சுருதியை விமர்சித்து ஒரு பிரிவினரும், தாமரைசெல்வியை விமர்சித்து ஒரு பிரிவினரும் மல்லுக்கட்டி வருகின்றனர்.