பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசனுக்கு இவ்வளவு சம்பளமா?

Bigg Boss Salary Season 5 Kamal Haasan
By Thahir Sep 17, 2021 04:18 AM GMT
Report

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தனது ஒளிபரப்பை தொடங்கியது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 5-ம் சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசனுக்கு இவ்வளவு சம்பளமா? | Bigg Boss Season 5 Kamal Haasan Salary

இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. எப்போதும் போல பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பட்டியல் நாள்தோறும் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும் நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தும் போது தான், உறுதியாக தெரிய வரும். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக்பாஸ் சீசன் 5-ல் கமல்ஹாசனுக்கு சம்பளமாகப் பேசப்பட்டிருக்கும் தொகை ஒருநாள் ஷூட்டுக்கு 4 கோடி ரூபாய்.

ஒவ்வொரு சீசனிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியில் கமல் கலந்துக் கொள்வார். நிகழ்ச்சி இரண்டு நாள் ஒளிபரப்பானாலும், கமலுக்கு அது ஒரே நாள் ஷூட் தான்.

அந்த வகையில் அவரின் ஒருநாள் கால்ஷீட் 4 கோடி ரூபாய். பிக்பாஸ் சீசனுக்கு கமல்ஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாட்கள்.

அதன்படி பிக்பாஸ் 5 சீசனுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் கமல். முதல் சீசனில் கமல்ஹாசனின் 1 நாள் கால்ஷீட் 1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.