பிக்பாஸ் சீசன் 5ல் புதுமண ஜோடி! யார் அவர்கள் தெரியுமா? வெளியான ரகசியம்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
நெகடிவ் விமர்சனங்கள் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எப்போதுமே ஜூன்- ஜூலை மாதங்களில் தொடங்கும் பிக்பாஸ், கொரோனா காரணமாக தள்ளிப்போகிறது.
கடந்த ஆண்டை போன்ற இந்த ஆண்டும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்து வந்ததாக கூறப்படும் நிலையில், யார் யார் எல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
அந்த வகையில் சமீபத்தில் திருமணமான சினேகன், தன்னுடைய மனைவி கன்னிகாவுடன் மீண்டும் பங்கேற்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.