வனிதா.. சின்ன பொண்ணா இருந்திருந்தா அதை செய்திருப்பேன் - ஓப்பனாக சொல்லிய பிரதீப்!
பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி, நடிகை வனிதாவிடம் பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
பிரதீப் ஆண்டனி
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றுள்ளார். இவர் 'அருவி' என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து 'வாழ்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் கவினின் நண்பர் ஆவார். தற்போது பிரதீப்பின் ஆட்டத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இவருக்கென தனி ரசிகர்களும் உள்ளனர். கடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கவின் பங்கேற்றிருந்தபோது, உள்ளே வந்த பிரதீப் கவினை அறைந்தது யாராலும் மறக்க முடியாது.
வைரலாகும் வீடியோ
அப்போதே அதில் இன்னொரு போட்டியாளராக இருந்த நடிகை வனிதாவிடம் பிரதீப் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் "வனிதா.. நீங்க சின்ன பெண்ணாக இருந்து, உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் சத்தியமாக நான் உங்களை உயிருக்கு உயிராக காதலித்திருப்பேன்.
இதை நான் உண்மையாக சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு ஆள் கூட இருந்தால், நான் உலகத்தையே ஜெயிச்சுருவேன்" என்று வனிதாவிடம், பிரதீப் கூறியது இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் சிரிப்பது போல் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 26, 2023