நான் பிக்பாஸ் போட்டியாளர் இல்லை - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லஷ்மி ராமகிருஷ்ணன்
ஒவ்வொரு பிக்பாஸிலும் தன்னுடைய பெயர் அடிப்படுகிறது என்ற சர்ச்சைக்கு லஷ்மி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். தமிழில் பிக்பாஸ் 5வது சீசனை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றன. வழக்கம்போல் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது தெரிந்த விஷயம்.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ இரண்டு ப்ரோமோக்களை வெளியானதால் பார்வையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த நான்கு சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் புதிய டாஸ்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமாக வீடு ஒன்றும் சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் இறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மற்றொரு பக்கம் நடிகை ரம்யாகிருஷ்ணன், நடிகர் ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர், டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், ஜி பி முத்து, ஷகிலாவின் மகள் மிலா, ‘குக் வித் கோமாளி’ புகழ் கனி, சுனிதா, மைனா நந்தினி, தொகுப்பாளர் ப்ரியங்கா, லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக ஒரு பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக, தான் பங்கேற்க இருப்பதாக வந்த செய்திக்கு லஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு சீசனிலும் நான் பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
நான் பிக்பாஸ் போட்டியாளர் இல்லை. என்னுடைய பெயரை நீக்குங்கள் என்று கூறியுள்ளார். தற்போது லஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதை பார்த்தால் பிக்பாஸில் அவர் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
I am seeing my name in the bigboss contestant list, every season. I am not part of #BiggBossTamil5 pls remove my name from the list, I am clarifying this once for all ? pic.twitter.com/zc61s1nlbu
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) September 5, 2021