காதலரின் போட்டோவை நீக்கிய நிவேதா - நிச்சயத்தை அறிவித்த ஜூலி!
ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
ஜூலி நிச்சயம்
சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, ஜல்லிக்கட்டு போராட்டம். தொடர்ந்து அடுத்த வருடமே விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ சென்றதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

பின், எந்தவொரு பேச்சும் இல்லாதிருந்த சூழலில், திடீரென தன் திருமணம் குறித்து அறிவித்திருக்கிறார். தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கும், அவரின் காதலரான ரஜித் இப்ரானுக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது. அதனால் தான் காதலர் பற்றிய இன்ஸ்டா போஸ்ட்டை நீக்கிவிட்டார் நிவேதா.
அந்த இப்ரானுடன் தான் தற்போது ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இப்படியாக சமூக வலைத்தளங்களில் ஒரு குழப்பம் ரவுண்ட் வருகிறது. இதனை ஜீலி தெளிவுபடுத்தினால்தான் உண்டு.
இதற்கிடையில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். தொடர்ந்து விரைவில் திருமண தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.