நடிகரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி
நடிகர் சித்தார்த் சுக்லா மரணமடைந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை ஜஸ்லீன் மதரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா, பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது மரணம் பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் பிக்பாஸ் 12 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜஸ்லீன் மதரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சித்தார்த் இறந்த அன்று அவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் விரைவில் நலமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஜஸ்லீன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.