பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யாரு? - அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் யார் டைட்டில் வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5-ன் ஃபைனலிஸ்டாக ராஜூ, பிரியங்கா, பாவனி, நிரூப், அமீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெறப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் விஜய் டிவி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தோராயமாக மக்கள் அளித்துள்ள வாக்குகள் அடிப்படையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்ட்டாக உள்ளே நுழைந்த அமீர் இதுவரை 11.07% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார் நீண்ட முடியுடன் இருந்த நிரூப் தற்போது ரெமோ போல அழகாக மாறினாலும் பாவனிக்கு கீழ் தான் நிரூப்பின் ஓட்டு விகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 13.55% ஓட்டுக்களுடன் 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார் நிரூப்.

கடைசி வரை ரசிகர்களின் பலத்தால் 3வது இடத்திலேயே தொடர்கிறார் பாவனி. 13.67% ஓட்டுக்களுடன் நிரூப்பை விட சற்றே முன்னிலையில் உள்ளார். இன்னும் ஒரு நாள் மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகும் சூழலில் நிரூப் ஆர்மியினர் நிரூப்பை முந்த வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் 19.7% வாக்குகளுடன் தொடர்ந்து பிரியங்கா 2வது இடத்தில் உள்ளார்.

ஆனால் இவர்கள் அனைவரையும்  விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தொடர்ந்து யாருமே தொட முடியாத முதலிடத்தில் நீடிக்கிறார் ராஜு ஜெயமோகன். 40 சதவீதத்தில் இருந்து 42.01 சதவீதமாக ராஜுவின் ஓட்டுக்கள் உயர்ந்துள்ளன. இந்த சீசன் டைட்டிலை ராஜு ஜெயமோகன் தான் வெல்வார் என்பது உறுதியாகி உள்ளது. வரும் சனிக்கிழமை நடக்கப் போகும் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்கில் இறுதி முடிவு தெரிந்து விடும்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்