குளிக்கும்போது எட்டி பாக்குறாங்க.. அதை சொல்லி சிரிக்கிறாங்க - கடுப்பான தாமரை!
பெண்கள் குளிப்பதை எட்டி பார்க்கிறார்கள் என்று பிரபலம் பேட்டியளித்துள்ளார்.
பிக் பாஸ் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தாமரை செல்வி. இவர் அதன்பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டான்ஸ் ஆடினார்.

இப்போது பல சின்னத்திரை சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சண்டை சச்சரவுமாக போகும் நிலையில் நடிகர் பிரதீப் ஆன்டனியை வெளியேற்றியது குறித்து பலரும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பேட்டி
இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் தாமரை இது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இந்த சீசனை நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து தான் வந்தேன். அப்போது எனக்கு பிரதீப்புடைய விளையாட்டு பிடித்திருந்தது. ஆனாலும் அவர் ஒரு சில நேரங்களில் பேசும் வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லவே முடியாது. பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை பூட்டிக்கொண்டு போகவில்லை என்று நிக்சன் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது சரிதான் பிரதீப் அப்படி கதவை பூட்டிக் கொள்ளாமல் போனது தவறுதான்.
ஆனால் பிரதீப்பை வெளியேற்றுவதற்கு முந்தைய நாள் இரவில் பெட்ரூமில் பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் விஷ்ணு குளித்துக் கொண்டிருப்பதை நான் முழுசா பார்த்து விட்டேன் என்று சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க.
இது மட்டும் சரியா? ஒரு ஆம்பள குளிச்சுகிட்டு இருக்கும்போது அவன் கதவை லாக் பண்ணாமையா குளிச்சிருப்பான்? அதை எதுக்கு இவங்க போய் எட்டிப் பார்க்கணும்? இவங்க பண்ணுனா மட்டும் சரியா?" என்று காட்டமாக பேசியுள்ளார்.
You May Like This Video
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil
அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல் IBC Tamil
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil