பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அடுத்த பிரபலம் - ரசிகர்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
அதன்படி இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் 7 பேர் இடம் பிடித்தனர். அதன்படி அபினய், இமான் அண்ணாச்சி, அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை, சிபி ஆகியோர் இடம் பெற்றனர்.
இதனிடையே இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்குகள் அதனால் ஏற்பட்ட சண்டைகள், பாவனி விவகாரம் என பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. இதனால் இதில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் இமான் அண்ணாச்சி குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் நிரூப் அல்லது அபினய் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இமான் அண்ணாச்சி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.