Friday, Apr 4, 2025

Exclusive...பஸ் ஷர்மிளா முதல் அப்பாஸ் வரை....பிக் பாஸ் சீசன் 7 கண்டஸ்டண்ட்ஸ் லிஸ்ட் இதோ..!!

Abbas Ammu Abhirami Sonia Agarwal
By Karthick 2 years ago
Report

பிக் பாஸ் சீசன் 7-இல் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அதில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடி இருக்கிறது.

பிக் பாஸ் 7  

இந்த வருட பிக் பாஸ் சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இது குறித்து நடிகரும், தொகுப்பாளருமான கமல்ஹாசன் அவ்வப்போது இது குறித்து அப்டேட்களை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில், இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற முதற்கட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

bigg-boss-7-contestants

கோவை மாவட்டத்தை சேர்ந்த முதல் பஸ் ஓட்டுநரான பஸ் ஷர்மிளா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

bigg-boss-7-contestants

அதே போல முன்னாள் கதாநாயகி சோனியா அகர்வால், தொகுப்பாளினி விஜே பார்வதி, சின்னத்திரை நடிகர் பப்லு பிரித்விராஜ் பங்கேற்க இருக்கிறார்கள். அதே போல நடிகை தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

bigg-boss-7-contestants

முன்னாள் நாயகன் அப்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை அம்மு அபிராமியின் பெயர்களும் பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது.   

bigg-boss-7-contestants

அதே நேரத்தில், விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களான விஜே ரக்‌ஷன் மற்றும் விஜே ஜாக்குலின் ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடந்த சீசனில் கலந்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மியின் முன்னாள் கணவர் தினேஷ் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

bigg-boss-7-contestants

இவர்களோடு சேர்த்து சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயரும், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் இந்த சீசனில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதோடு காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான விக்னேஷ் மற்றும் நடிகை ஷகீலாவின் மகளும் மாடல் அழகியுமான மிலா ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார்களாம்.