நீங்க செய்வதை செய்யுங்க..கடுப்பில் கமல் - அதிர்ந்து போன அசீம்!

Kamal Haasan Viral Video Bigg Boss
By Sumathi Oct 30, 2022 08:16 AM GMT
Report

அசீம் செய்த தவறுகளை கமல் சுட்டிக்காட்டியுள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பொம்மை போட்டி

பிக்பாஸ் சீசன் 6 மிகவும் ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட நானும் பொம்மை நீயும் பொம்மை போட்டியில் பலரது சுரூபம் வெளிவந்தது. அதில் அல்டிமேட் காட்டியவர் அசீம்தான். அடிக்கடி இவருக்கும் தனலட்சுமிக்கும் ஏற்பட்ட சண்டை அனைவரைரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நீங்க செய்வதை செய்யுங்க..கடுப்பில் கமல் - அதிர்ந்து போன அசீம்! | Bigg Boss 6 Tamil Kamal Condemns Azeem Behaviour

தொடர்ந்து, விக்ரம், அமுதவானன் என எல்லோரிடமும் மோசமான வார்த்தைகளோடு சண்டையிட்டார். கடைசியாக தனலட்சுமியின் தோள்பட்டையில் கைவைத்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளானது.

ப்ரோமோ

இதனால், மற்ற போட்டியாளர்கள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக் கொள்வதாக அசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதனை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் கடுமையான வார்த்தைகளால் அவர்களை விமர்சித்தார். அதனையடுத்து அசீம் நடவடிக்கைகளை கண்டிக்க மக்கள் கமல்ஹாசனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வெளியான ரீசண்ட் ப்ரோமோவில், அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன்.

யாருக்காக தெரியுமா உங்கள் பையனுக்காக. இதுதான் என் Strategy என்று நீங்கள் சொன்னால், மற்றவர்களிடம் நான் அஸிமிடம் கவனமாக இருங்கள் என்று சொல்ல வேண்டும். அவமானப்படுத்துவார், உடல் மொழியை கேலி செய்வார். தயாராக இருங்கள், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். இவர்களும் செய்ய வேண்டியதை செய்வார்கள் என கொந்தளித்துள்ளார் கமல்ஹாசன்.