பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் போட்டியாளர் : யார் தெரியுமா ?

Bigg Boss
By Irumporai Oct 10, 2022 02:34 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் நேரடி அரசியல்வாதி போட்டியாளராக விசிக செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 6

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது.

இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.  

விக்ரமன் பங்கேற்பு

இந்த நிலையில் இந்த முறை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் பிறந்து தேனியில் வளர்ந்த அவருக்கு சிறு வயதில் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்தேன். ஒரு விஷயம் நம்மளால முடியலன்னாலும் அதிகாரத்துல இருக்கறவங்களை செய்ய வைக்கணும்.

இது ஒரு  சான்ஸ்

தான் பார்த்த பத்திரிக்கையாளர் பணி அதற்கு பெரிய அளவில் கைக்கொடுப்பதாகவும் விக்ரமன் கூறியுள்ளார். மேலும், ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அப்படின்னு இதை நீங்க தவிர்க்கல.

இயற்கையாகவே உங்ககிட்ட அந்த எண்ணம் இருக்கு. அப்படி என்னாலையும் ஒரு விஷயத்தை கொண்டு போக முடியும்ன்னு நினைக்கிறேன். நம்புறேன்.மேலும் சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கணும். அதை வெளிப்படுத்துற ஒரு சான்ஸ்ன்னு நான் நினைக்கிறேன் என விக்ரமன் தெரிவித்துள்ளார்.