இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? - வெளியான பரபரப்பு தகவல்

tamil biggboss5 evtion
By Irumporai Dec 03, 2021 11:38 AM GMT
Report

கொரோனா தொற்று  இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிவருகின்றார். தற்போது  கொரோனா தொற்றில் இருந்து  மீண்டு வந்துள்ள கமல் ஹாசன், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்  பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி 7 நபர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா? - வெளியான பரபரப்பு தகவல் | Bigg Boss 5 This Weak Evition Fans

அந்த வகையில்  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அபிஷேக் தான் வெளியேறப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியேறி, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் இந்த வாரம் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.