பிக்பாஸில் வீட்டில் முதல் முறை திருநங்கை... அவர் யார் தெரியுமா?
விஜய் டிவியி ஒளிபரப்பப்பாகும் நிகழ்ச்சிகளில் ரிபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது ,இந்த நிலையில் நேற்று தொடங்கிய பிகபாஸ் சீசன் 5 - கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
தற்போது பிக்பாஸ் தமிழ் சீசனில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்கிறார். அவர் தான் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு வென்ற நமீதா மாரிமுத்து.
இவர் ஒரு சில டிவி சீரியல்களிலும், நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார் மேலும், இவர் 201 கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர்.
மேலும் இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் சீசனில் திருநங்கைகள் கலந்துகொண்டது வரவேற்பை பெற்றது ஆகவே தற்போது தமிழ் பிக் பாஸும் அதே முறையினை பின் பற்றுவதாக கூறப்படுகிறது.