உங்கள் வாக்குகள், இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது" - வெளியானது பிக்பாஸ் மாஸ் ப்ரோமோ

kamalhassan bigbosstamil5 13thprmo
By Irumporai Oct 16, 2021 09:20 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் முடிந்துள்ளது இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதில் நமீதா மாரிமுத்து திடீரென்று போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் 15 போட்டியாளர்கள் உள்ளனர்.

தாமரை இந்த வாரம் வீட்டின் தலைவராக உள்ளதால் அவர் நாமினேட் செய்யப்படவில்லை. அதேபோல் பாவனி ரெட்டிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் இவர்கள் இருவரை தவிர்த்து 15 பேர் நாமினேஷனில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 இல் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன் , கடந்து வந்த பாதையையும் , அவர்களின் கதைகளையும் நீங்கள் புரிந்து வைத்து இருப்பீர்கள். 15 பேர் வீட்டிலிருந்து நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது நீங்கள் அளித்திருக்கும் வாக்குகள், இந்த வீட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை இன்றிலிருந்தே பார்க்க போகிறோம்" என்று சொல்வது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது இன்று என்னென்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.