உன் கூடவே பொறக்கனும் - பிக் பாஸ்-ல் மலர்ந்த புது உறவு: வெளியான ப்ரோமாவால் ரசிகர்கள் கண்ணீர்!
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில், தொகுப்பாளர் கமலிடம் யூடியூப்பர் அபிஷேக், தொகுப்பாளினி பிரியங்காவை தன் அக்காவாக நினைத்து அழுகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நெகிழ்ச்சியடைய செய்தது. பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து தற்போது 5 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அதில் யூடியூப்பர் அபிஷேக், தொகுப்பாளினி ப்ரியங்காவை தன் அக்கா என்று கூறி கண் கலங்கினார். இதனை கண்ட பிரியங்கா அபிஷேக்கை கட்டி தழுவி ஆறுதல் கூறுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் திழைத்தனர்.