பிரமாண்டமாக நடந்த பிக் பாஸ் Grand Launch.. வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள் விவரம் இதோ !
தொலைக்காட்சி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ் தொடர்ந்து நான்கு சீசன்களாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தற்போது 5வது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்கியது.
கடந்த நான்கு சீசன்களை தனது பாணியில் தொகுத்து வழங்கி வந்த உலக நயனகன் கமல் ஹாசன், 5வது சீசனின் துவக்க விழாவையும் சிறப்பாக தொகுத்து வழங்கினார். மேலும், யார்யாரெல்லாம் இந்த பிக் பாஸ் 5ல், கலந்துகொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டிற்குள் சென்றுள்ள நட்சத்திரங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை இங்கு பார்ப்போம். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 முதல் போட்டியாளராக இசையுடன் தொடங்கினார் கானா இசைவாணி. இசைவாணியின் அறிமுக வீடியோவே கலக்கியது.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #IsaiVani #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/clWZt1cOrP
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
துறைமுகப்பகுதியில் பிறந்தவராக தன்னை அறிமுகப்படுத்தியவர் ‘’நான் ரொம்ப நல்லா பாடுவேன் ஆனா எல்லா இடத்துலயும் பாடவிடமாட்டாங்க. கடைசியா தான் மைக் கிடைக்கும். இப்போ Casteless Collective-இல் தொடங்கி வளர்ந்திருக்கேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இசைவாணி, இந்த மேடையை மிகச் சரியாக பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளார்.
அடுத்த போட்டியாளராக அறிமுகமான மிமிக்ரி சென்ஸ் இருக்குனு தெரியும், காமன்சென்ஸ் இருக்கான்னு பாப்போம் என பாக்யராஜை இமிடேட் செய்து கமல்ஹாசனை அசத்திய ராஜுமோகன் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Raju #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/UisWsDKJoY
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
தொடர்ந்து ராஜுவின் Introductory வீடியோ கலக்கியது. ராஜு பிக்பாஸ் கவினின் நண்பர் குறிப்பிடத்தக்கது .
ஜெர்மனியில் இருந்து வந்த மாடல் மதுமிதா. தற்போது மென்பொறியாளராக பணிபுரிகிறார். அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனம். உள்ளே வந்தபின்பும் அது அப்படியே இருக்குமா என போகப் போக தெரியும்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Mathumitha #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/dd2VSNppMb
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
அன்னப்பறவை மாதிரி இருக்கப்போறேன்..” ”ட்ரோல்லேயே ட்யூன் ஆனவன்..” என வந்தவுடன் பஞ்ச்களைப் போட்டுத்தள்ளினார் சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா. பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும், சிக்கன் இருக்கு, சிப்ஸ் இருக்கு என்கிறார் ராஜு. சிப்ஸ் போதுமே என்கிறார் அபிஷேக் ராஜா .
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Namitha #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/RHim2pA9I7
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
நமிதா மாரிமுத்து ஜெயிக்காத திருநர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என அழகான ஸ்டேட்மெண்ட்டோடு உள்ளே வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நமிதா, கேமராவில் தன் சமூகம் சார்பாக தான் வந்திருப்பதில் பெருமை என பெருமிதம் தெரிவித்தார்.
அறிமுக வீடியோவில் அவ்வளவு அழகாக இருந்த நமிதா,சமூகத்தின் பிரச்சனைகளையும் கூறினார்.
விஜய் டிவி-யின் பிக் பாஸ் 5-ம் சீசனில் போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Priyanka #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/FfMIkM8lVI
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
. இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5-ல் ஆறாவது போட்டியாளராக விஜய் டிவி பிரியங்கா கலந்துக் கொண்டுள்ளார்.
தனக்கென பெரிய லட்சியம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்ட பிரியங்கா, எல்லாமே குறைந்த கால டார்கெட் தான் என்றார். அப்படி இருக்கும் பக்கெட் லிஸ்டில் ஒன்று பிக் பாஸ் செல்வது என்றும் குறிப்பிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது போட்டியாளராக அபினய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Abhinay #BiggBosstamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/s3X5pC1H57
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
இவர் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராமனுஜராக நடித்திருந்தார். தற்போது விவசாயம் செய்ய முடியாத ஏழைகளின் நிலங்களை லீஸிற்கு எடுத்து, அதில் உரிமையாளர்களையே வைத்து தான் விவசாயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார் களத்தூர் கண்ணம்மாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபினய் அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்றார் கமல்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Pavni #BiggBossTamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/GmOjzD12Ju
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
பிக் பாஸ் சீசன் 5-ல் சின்னத்தம்பி சீரியல் நடிகை பாவ்னி ரெட்டி 8 -வது போட்டியாளராகஅறிமுகப்படுத்தப்பட்டார். சராசரி பெண்ணாக 23 வயதில் திருமணம் செய்துக் கொண்டு, கணவர், குழந்தை என வாழ வேண்டும் என நினைத்த பாவ்னிக்கு, அது தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதைக் குறிப்பிட்டு, திருமண வாழ்க்கையில் தனக்கு ராசியில்லை என்றார். பிக் பாஸ் போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் தான் கடந்து வந்த கடினமான நாட்களை நினைவுக்கூர்ந்தார். கொரோனா சூழலால் மற்ற கலைஞர்களைப் போல தானும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மாடல் சுருதியை பிக் பாஸ் மேடையில் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல் ஹாசன்.
ஸ்ருதி இங்கே என்றால் அக்ஷரா எங்கே எனக் கேட்கிறீர்களா? என்றவாறு மற்றொரு மாடல் அக்ஷரா ரெட்டியை மேடைக்கு அழைத்தார்.
சாமானியர்களுக்கு புரியும் படி மாடல் என்றால் என்ன என்பதை விளக்கிய கமல், அவர்களை ரேம்ப் வாக் செய்துக் காட்டச் சொல்லி, பின்னர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். ஏற்கனவே 3 மாடல்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க, தற்போது அது 5 ஆக உயர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலம் இமான் அண்ணாச்சி, போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். நிகழ்ச்சியில் குட்டீஸ்களை கையாள்வதைப் போல, பிக் பாஸ் வீட்டிலுள்ள குட்டீஸ்களையும் கையாளுவேன் என மேடையில் குறிப்பிட்டார் அண்ணாச்சி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் ஹாசனை வரவேற்று அழகாக ஆங்கரிங் செய்து அசத்தினார்.
தமிழ் ரேப் இசைக்கலைஞர் ஐக்கி பெர்ரி போட்டியாளராக களமிறக்கப்பட்டார். தஞ்சையை சேர்ந்த ஐக்கி, தான் ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
மருத்துவரான இவர், இசை மீது கொண்ட காதலால், இண்டிபெண்டென்ட் ரேப் பாடகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மாஸ்டர் நடிகர் சிபியும், பிசினஸ்மேன், ஸ்டார்ட் அப் முனைவர் நிரூப் என இருவரும் அடுத்ததாக எண்ட்ரியாகி இருக்கிறார்கள்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Niroop #BiggBossTamil #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/fZoAq9Zm4a
— Vijay Television (@vijaytelevision) October 3, 2021
இந்த முறை பிக்பாஸ் எல்லாவிதமான துறைகளில் இருந்தும் ஆட்களை அள்ளித் தூக்கியிருக்கிறது. தமிழ் ரேப் கலைஞர் ஐக்கியமான ஐக்கியும், தாமரைச் செல்வியும் கண்டெஸ்டெண்ட் பட்டியலுக்கு ஒரு புது ஃப்ளேவர் கொடுத்தார்கள்