பிக் பாஸ் 5-ல் ஜிபி முத்து - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்ளவுள்ளதாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் யார் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சிலர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் கசிந்த நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகமடைந்துள்ளனர். இதில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில், தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.