பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் தீபாவளி கொண்டாட்டம் - வரப்போக்கும் ஸ்பெஷல் எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்
பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக 5வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்த சீசன் தீபாவளி எபிசோட் குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற வட இந்திய மொழிகளில் தொடங்கி பல சீசன்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், தமிழில் புதியதாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் காரணமாகவே அனைவரும் பார்க்கத் தொடங்கினர்.
பின்னர், உலக நாயகனின் பேச்சு மற்றும் அங்கு நடக்கும் சண்டைகள் மக்களை தொடர்ந்து தன் வசம் இழுத்து தற்போது வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5வது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 தற்போது நான்காவது வாரத்தில் பயணிக்கிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தாமதமாக தொடங்கப்பட்டது.
இதற்கு முந்தைய வருடங்களில் ஜூலை மாதம் ஆரம்பித்து முடிந்து விடும். செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்திருப்பதால் பல பண்டிகைகளை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது மொத்தம் இருந்த 18 போட்டியாளர்களின் 3 பேர் வெளியேறி உள்ள நிலையில் 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி அன்று தீபவாளி பண்டிகை வர உள்ளது.
இதற்காக சிறப்பு எபிசோட் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். அதன்படி, தீபாவளி அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிறப்பு எபிசோட் தொடர்ந்து 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
அதில் கொண்டாட்டமும், கலகலப்புமாக அன்றைய எபிசோட் களைகட்டப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.