பிக்பாஸ் போட்டியாளர் நமிதா மாரிமுத்துக்கு கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bigg Boss - Season 5 Namitha Marimuthu
By Anupriyamkumaresan Oct 11, 2021 12:21 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்து கொண்ட நிலையில் அவர் திடீரென போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த ஆண்டிற்கான ஐந்தாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. வழக்கமாக இல்லாமல் இந்த ஆண்டு 18 போட்டியாளர்களும் ஒரே நாளில் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதில் அதிகமாக பெண் போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒரு திருநங்கை போட்டியாளரும் அடங்குவார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் திருநங்கை போட்டியாளர் என்ற பெருமை நமீதா மரிமுத்துவிற்கு சென்றது.

அவர் ஒரு சமூகஆர்வலர் மற்றும் ஒரு மாடலும் கூட, இந்நிலையில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் அவருடைய வாழ்க்கையை பற்றி கதையாக சொன்னது அனைவரின் மனதையும் கவர்ந்தது. இதனால் பலர் அவருக்கு ஆதரவு வழங்கினார். ஆனால் அதன் பின் தாமரை செல்வியுடன் அவருக்கு நடைபெற்ற சிறிய சண்டை மக்களிடம் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ஒளிபரப்பான காட்சிகளை பார்க்கும் போது அவர் மீது அந்த அளவிற்கு தப்பு இல்லை என தோன்றுகிறது. இந்நிலையில் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார் என தெரிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் போட்டியாளர் நமிதா மாரிமுத்துக்கு கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss 5 Contestant Namitha Marimuthu Covid

ஆனால் இது குறித்து சரியான காரணம் எதுவும் வெளியாகவில்லை. அவருக்கு உடல்நிலை சரி இல்லை என பேசப்பட்டது. ஒரு சிலர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தொலைக்காட்சி நிறுவனம் பங்கேற்பாளர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நிகழ்ச்சி ஆரம்பமானது.

ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்களுக்குள்ளாகவே போட்டியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.