பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னர் யாருன்னு தெரியுமா? வெளியான தகவல் - ரசிகர்கள் மகிழ்ச்சி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாமரை, நிரூப், அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் சண்டைக்கும், சச்சரவிற்கும் குறைவே இல்லாமல் இருந்தது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக தற்காலிகமாக விலகினார்.
நடிகர் கமல் விலகியதால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி யார் தொடர்ந்து நடத்துவார்கள் என்று ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது, பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் வின்னராக பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை ஒளிப்பரப்பாக உள்ளது. இதற்கான ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதில் பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் 4வது சீசனில் இரண்டாவது இடம் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை விட்ட நிலையில் தற்போது மீண்டும் பிடித்துள்ளார்.