பிக்பாஸ் தாமரைச் செல்வியின் வெளியான சம்பள விவரம் - 98 நாட்களுக்கு இவ்வளவு லட்சமா?

பிக்பாஸ் நிகச்சியிலிருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி இருக்கிறது. இதனையடுத்து, குக் வித் கோமாளி சீசன் 3-ல் தாமரை போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். பிரபல விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஷோ நிறைவடைய உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பாவனி, அமீர், ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கியிருக்கிறது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3-ல் தாமரை போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

இது ஒருபுறம் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தாமரைக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரைக்கு ஒரு வாரத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அவர் 14 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கிறதாம். இதை அறிந்த ரசிகர்கள் அவர் money டாஸ்கில் 12 லட்சத்துடன் வெளியேறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்