பிக்பாஸில் தாமரை, பிரியங்கா கைகலப்பு - அதிர்ச்சி ப்ரொமோ வெளியீடு
bigboss
priyanka
fighting
thamarai
shocking-video
By Nandhini
4 years ago
விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இன்னும் சிறிது நாட்களில் நிறைவடைய உள்ளது.
சென்ற வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து போட்டியாளர்களை மகிழ்வித்து சென்றனர்.
இந்தவாரம், நேற்றைய தினத்திலிருந்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த நபர் நேரடியாக பைனலுக்கு சென்றுவிடுவார்.
இந்நிலையில், இன்று கொடுக்கப்பட்ட முட்டையை பாதுகாக்கும் டாஸ்க்கில், தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் பயங்கர சண்டை அரங்கேறி இருக்கிறது.
இந்தப்போட்டியில் தாமரையும், பிரியங்காவும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது போல் ப்ரொமோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரொமோவை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.