பாட்டுப்பாடி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தாமரை - சூப்பரான ப்ரொமோ
பிரபல விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஷோ நிறைவடைய உள்ளது.
இதன் இறுதிப்போட்டியில் பாவனி, அமீர், ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.
இறுதிப்போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், தாமரைச் செல்வி, கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரொமோவில் தாமரைச் செல்லி பாட்டுப்பாடி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது சக போட்டியாளர்கள் ஓடி வந்து அவரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
இதோ அந்த ப்ரொமோ -