பிக்பாஸ் 7: டைட்டில் வின்னர் இவர்தான் - லீக்கான ரிசல்ட் ஸ்ட்ராட்டஜி?

Archana Bigg Boss Star Vijay
By Sumathi Dec 24, 2023 05:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் உலா வந்த வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 7

பிக்பாஸ் 7வது சீசன் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. எப்போதும் போல சண்டை, சச்சரவு, எமோஷன் என எதற்கும் குறையில்லை.

big boss 7

இதில், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் ரசிகர்களையும், கண்டனங்களையும் பெற்றுவிட்டது. இருப்பினும், ஹாட் டாப்பிக்கிலேயே இருந்து வருகிறது.

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

பிக் பாஸ் 7: அசம்பாவிதத்தால் நொறுங்கிய வீடு; தற்காலிக நிறுத்தம் - என்ன காரணம்!

டைட்டில் வின்னர்?

இந்த சீசனில் மட்டும்தான் 80 நாட்களை கடந்தும் யார் டைட்டில் வின்னர் என்று கணிக்க முடியாத வண்ணம் சென்று கொண்டிருக்கிறது. தற்போது, விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் இவர்கள் மூவருக்குள்ளும் தான் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vj archana

இந்நிலையில், முன்னதாக பிக் பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ், இவருடைய பெயரின் முதல் எழுத்து ஆங்கிலத்தில் A-ல் ஆரம்பிக்கிறது.

இரண்டம் சீசன் - ரித்விகா - R மூன்றாம் சீசன் - முகேன் - M நான்காம் சீசன் - ஆரி அர்ஜுனன் - A ஐந்தாவது சீசன் - ராஜு - R ஆறாவது சீசன் -அசிம் - A பெரும்பாலும் A எழுத்தை முதலாக கொண்டவர்களே வெற்றியாளராக இருந்ததால், அந்த வகையில் இந்த சீசனில் A-வில் துவங்கும் நபர் அர்ச்சனாதான் என்ற தகவல் ஒன்று பரவி வருகிறது.  

You May Like This Video