கோலாகலமாக நடந்த பிக்பாஸ் சீசன் - 5 கொண்டாட்டம் - வின்னரானவர் இவர்தான் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கோலாகலமாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்றோடு முடிவடைகிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி முதலில் சுவாரஸ்யம் குறைந்து காணப்பட்டாலும், அடுத்தடுத்து எபிசோடுகளில் அனல் பறந்துக் கொண்டிருந்தது. கடந்த சீசன்கள் போன்று சண்டைகள், பிரச்சினை என பல அதிரடிகள் இந்த எபிசோடில் இருந்தது.
இதனால் பிக்பாஸ் வீடே மிகவும் களைக்கட்டியது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கிறார்கள். அதில் ராஜு மற்றும் பிரியங்கா இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது.
அடுத்தடுத்த இடங்களில் பாவனி, அமீர் மற்றும் நிரூப் இருக்கிறார்கள். இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு கொரானா காரணமாக நேற்றே நடைபெற்று விட்டது. பிரம்மாண்ட நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் பிக்பாஸ் வின்னராக ராஜூவும், ரன்னராக பிரியங்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து, பாவனி இரண்டாவது ரன்னராகவும், அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்கள் பெற்றிருக்கிறார்கள். கொரானா காரணமாக குறைந்த பார்வையாளர்களும், இந்த சீசன் போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.