ரக்ஷிதாவிடம் அத்துமீறும் ராபர் மாஸ்டர் - கோபத்தில் கொதிக்கும் கணவர் தினேஷ் - ரசிகர்கள் கண்டனம்

Viral Video Bigg Boss
By Nandhini Nov 10, 2022 12:17 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஷிதாவிடம் ராபர் மாஸ்டர் அத்துமீறி வருவதால் கணவர் தினேஷ் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அத்துமீறும் ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராபர்ட் மாஸ்டர் ராக்ஷிதாவின் கையைப் பிடித்து, நான் உனக்கு அண்ணன் என்றால் எனக்கு முத்தம் கொடு என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் ரக்ஷிதா துடிதுடிக்கிறார். கையில் கூட அண்ணனுக்கு முத்தம் கொடுக்கலாம் என்று கூற ரக்ஷிதா அலறுகிறார். உடனே அங்கே வந்த மைனாவின் கையை ராபர்ட் மாஸ்டர் பிடித்து அண்ணனுக்கு நீங்கள் முத்தம் கொடுப்பீங்களா என்று கேட்கிறார்.

இதனையடுத்து ராபர்ட் மாஸ்டரிமிடருந்து தன் கையை விலகிக்கொண்ட ரக்ஷிதா, ஒருவழியாக தப்பித்துக் கொள்கிறார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரக்ஷிதாவின் கணவர் தற்போது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

bigboss-rakshita-robert-master-viral-video

கடும் கோபத்தில் தினேஷ்

ரக்ஷிதாவும் அவருடைய கணவர் தினேஷ் இருவரும் பிரிந்து இருந்தாலும் சட்டப்படி அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யவில்லை. மேலும், ரக்ஷிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போது, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் தினேஷ்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் ஒரு சில செயல்களால் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்திற்கு கடும் எரிச்சலையும், கோபத்தையும் வரவழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.