வீட்டிற்கு வந்தா யார்கிட்டயும் பேசுற இல்ல... - நிகழ்ச்சியில் போட்டுடைத்த கணவர் - கண்கலங்கிய நிஷா
பிரபல விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது நீயா? நானா? தான்.
இந்த நிகழ்ச்சி வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கிக்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
அந்த ப்ரொமோவில், நிஷாவும், அவரது கணவரையும் காண்பிக்கிறார்கள். அப்போது, கோபிநாத்... நிகழ்ச்சி செட்டியில் கலகலப்பாக இருக்கும் நிஷா வீட்டிற்கு சென்றால் கலகலப்பாக இருக்கிறார்களா என்று கேட்கிறார். அதற்கு நிஷாவின் கணவர் அது கிடையாது.. வீட்டில் யாரிடமும் நிஷா சரியாக பேசுவது கிடையாது என்று நிகழ்ச்சியில் பட்டென்று எல்லாவற்றையும் போட்டுடைக்கிறார். அதைக் கேட்ட நிஷா கண்ணீர் விட்டு அழுகிறார்.
தற்போது இந்த ப்ரொமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.