பிக் பாஸ் கேபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

corona bigboss result corona positive gabrilla
By Praveen May 06, 2021 04:32 PM GMT
Report

தொலைக்காட்சி பிரபல கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அடுத்து விஜய் டிவி யூனிட் முழுவதும் பரபரப்பாகியுள்ளது.

தமிழில் வெளியான '3' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் கேப்ரியல்லா. அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி நடத்திய பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை சென்றார்.

அதனால் அவருக்கான ரசிகர்கள் வட்டம் மேலும் அதிகரித்தது. தற்போது இவர் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் அவர் பாடகர் ஆஜித்துடன் சேர்ந்து நடனமாடி வருகிறார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதி, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவருடன் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் மொத்த யூனிட்டுமே கொரோனா கலக்கத்தில் உள்ளனர்.