பாவனிக்கு முத்தம் கொடுத்தது ஏன்? நடந்தது இதுதான் - முதன்முறையாக மனம் திறந்த அமீர்

bigboss vijay tv open talk kissing viral news amir
3 மாதங்கள் முன்

சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்தவர் நடன இயக்குனர் அமீர்.

இவர் இந்நிகழ்ச்சியில் மிக திறமையாக விளையாடினார். அதிலும் கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கினார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னரானார். 2-வது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்திருந்தார்கள்.

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் சோசியல் மீடியா முழுவதும் அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சு தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தார். இது குறித்து பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசினார்கள்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது - நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே போகும்போது பாவனி மட்டும் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். எல்லா பிரச்சனையிலும் அவர் மாட்டிக் கொண்டு தனியாக இருப்பதை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருந்தது.

அதனால் அவரிடம் நான் அதிகமாக பேசுவேன். அப்படித்தான் எங்கள் இருவருக்கும் நட்பு உண்டானது. அதற்குப் பிறகு நான் வெளிப்படையாக பாவனியை காதலிப்பதைக் கூறினேன்.

ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று சொன்னார். அது அவருடைய விருப்பம். நான் என்னுடைய விருப்பத்தை நிகழ்ச்சியில் இருக்கும் போதும் சரி இப்போதும் சரி சொல்லி விட்டேன். ஆனால், அவர் நட்பாக இருக்கலாம் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

ஆனால், அந்த முத்தக்காட்சியை குறித்து எல்லோரும் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமாக கருத்துக்களைக் கூறிவருகிறார்கள். சொல்லப்போனால், நான் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்ததாக சொல்கிறார்கள்.

அப்படி கொடுத்திருந்தால் பிரச்சனை நடந்திருக்கும். நான் கொடுக்கும் போது அவரும் எதுவும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் குற்றம் செய்தது போல் பேசுகிறார்கள்.

அப்போது இருக்கும் மனநிலையில் என் காதல் உணர்வில் நான் கொடுத்துவிட்டேன். எனக்கு அது தவறாகவே தெரியவில்லை. இதை ஏன் இப்படி பெரிசு பண்ணி சர்ச்சையாக்குகிறீர்கள்? என்று தான் தெரியவில்லை.

இன்னமும் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அமீர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.