பாவனி முன் லொஸ்லியாவிற்கு தன் காதலை சொன்ன அமீர் - ஷாக்கான ரம்யாகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ

By Nandhini May 09, 2022 06:29 AM GMT
Report

சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்தவர்தான் நடன இயக்குனர் அமீர். இவர் இந்நிகழ்ச்சியில் மிக திறமையாக விளையாடினார். அதிலும் கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாவனியை அமீர் உருகி, உருகி காதலித்தார். அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சு தான் அதிகம் சோசியல் மீடியா முழுவதும் அதிகமாக பேசப்பட்டது.நிகழ்ச்சி முடிந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்ததை குறித்து பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசினார்கள்.

தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக, பிரியங்காவும், ராஜூவும் இறங்கியுள்ளனர். அமீர்-பாவனிக்கு ஜோடியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமீர் நன்றாக நடனம் ஆடுவார். ஆனால் பாவனி அவருக்கு ஈடுகொடுத்து ஆடுவாரா என்று பலர் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ப்ரொமோ ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த ப்ரொமோவில் பாவனி முன்பு அமீர் இலங்கைப் பெண்ணான லொஸ்லியாவிடம் காதலை சொல்கிறார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட டயலாக் போல அமீர் தன் காதலை சொல்ல, அதைக் கேட்டு நடுவர் ரம்யா கிருஷ்ணன் ஷாக்காகி சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாக வைரலாகி பரவி வருகிறது.