ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட் - உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அவரது ரசிகர்கள்

bigboss jackpot actress shivani
By Nandhini Jan 24, 2022 06:39 AM GMT
Report

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்தான் நடிகை ஷிவானி. தற்போது ஷிவானிக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இதுதவிர இயக்குநர் பொன்ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்திலும் ஷிவானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது நடிகை ஷிவானிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாகநடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வடிவேலுவின் தீவிர ரசிகையான ஷிவானி, தற்போது அவருடனே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் அவரும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். 

ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட் - உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அவரது ரசிகர்கள் | Bigboss Actress Shivani Jackpot