பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் போட்ட முதன்முதலா போட்ட உருக்கமான பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலத்தின் வாரிசு என்றும் வளர்ந்து வரும் நடிகர் என்ற அடையாளத்துடன் நுழைந்தவர் அபிநய்.
ராமானுஜம் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதை, சென்னை 28 என சில படங்களில் நடித்துள்ளார், ஆனால் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே சினிமாவில் பெரிய ரீச் கிடைக்க இவரும் நிறைய உழைப்புகள் போட்டு வருகிறார்.
இதற்கிடையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வீட்டிற்கு வந்த பிறகு தற்போது இன்ஸ்டாவில் முதல் பதிவு போட்டுள்ளார்.
அதில் நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறித்தும் தனது ஆதரவு தந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.