பிக்பாஸ் அபினய் பிரிகிறாரா? விவாகரத்து குறித்து பதிவிட்ட அபினய் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்
சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் அபினய் வட்டி. இவர் மறைந்த பழம்பெரும் நட்சத்திர தம்பதி ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனாவார்.
பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிகம் பேசப்பட்டது பாவனி, அபினய் காதல் விவகாரம் தான். அபினய், பாவனி மீது அதீத அக்கறை, அன்பு காட்டியது பற்றி வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் கிசுகிசு பேசி வந்தனர்.
இந்த காதல் சர்ச்சையே அபினய் வீட்டிலிருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்திருந்தது. சமீபத்தில் அபினய், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின், ‘இது ஒரு கேம். இதை தாண்டி வாழ்க்கை உள்ளது’ என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார்.
பாவனி விவகாரத்தை உங்கள் மனைவி எப்படி எடுத்துக் கொண்டார் என்ற கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்த அபினய், எல்லா மனைவிகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ அப்படி தான் என்று கூறியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி விவகாரம் பெரிதாக வெடித்த போது, இது குறித்து அபினய் மனைவி, நீ எப்படிபட்டவன் என எனக்கு தெரியும். என்னை விட உன்னை யாருக்கும் தெரியாது. என்னை போல் புரிந்து கொள்ளவும் முடியாது. Love you always. always team abhinay - aparna abhinay என இன்ஸ்டாகிராமில் அபினய்யின் மனைவி அபர்னாவும் பதிவிட்டிருந்தார்.
ஆனால், திடீரென இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்னா அபினய் என குறிப்பிட்டிருந்த அபர்னா, அபர்னா வரதராஜன் என்று மாற்றினார்.
அபினய்யை விவாகரத்து செய்ய போகிறாரா, முதலில் அபினய்க்கு ஆதரவாக பேசிய அபர்னா இப்போது ஏன் தனது பெயரில் இருந்த கணவர் பெயரை நீக்கினார் என்று அடுக்கடுக்காக ரசிகர்கள் கேள்விகளை கேட்டனர்.
இந்நிலையில், அபிநய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும். அது தான் உண்மையான gender equality என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், ஏன் இப்படி ஒரு பதிவு போட்டீர்கள்? வதந்தியெல்லாம் உண்மையா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.