பிக்பாஸ் வனிதா மீது கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி இருக்கும் வனிதாவின் விஜய் குறித்து பேசிய கருத்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. 1995ம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை வனிதா. இவர் விஜய்குமார் - மஞ்சுளா தம்பதியி மகள் ஆவார்.
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டியில் அவர் கூறிய கருத்துக்கள் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அப்பேட்டியில் நடிகை வனிதா கூறியதாவது -
அப்போது நடிகர் விஜய்யை நான் அணுகிய முறைக்கும் இப்போது அவர் இருக்கும் உயரத்தை பார்க்கையில் வியப்பாக இருக்கு. அந்த நாட்களில் விஜய்யிடம் நான் எப்படி பேசிப் பழகினேனோ அப்படியே இன்னைக்கும் என்னால பேசமுடியும்.
திடீர்னு `அவர்', `இவர்'னு மாத்திப் பேச முடியாது. இன்னைக்கு நான் பேசுறதைக் கேட்கிறவங்களுக்கு நான் ஏதோ மரியாதைக்குறைவா பேசுறது போல தெரியும். ஆனா, நான் ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் பேசிப் பழகியிருக்கேன்.
நடிகர் விஜய்யோட ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கள். ஆரம்பகால `தளபதியின் கதாநாயகி' என்கிற அந்தஸ்து எனக்கு இருக்கு, அவரோட ரசிகர்கள் மத்தியில எனக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வனிதாவின் இந்த கருத்து ஒரு சில விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள்.