பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்து செம்ம குத்தாட்டம் போட்ட சிம்பு - மாஸான வீடியோ - உற்சாகத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாமரை, நிரூப், அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் சண்டைக்கும், சச்சரவிற்கும் குறைவே இல்லாமல் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தன்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக தற்காலிகமாக விலகினார். நடிகர் கமல் விலகியதால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி யார் தொடர்ந்து நடத்துவார்கள் என்று ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை ஒளிப்பரப்பாக உள்ளது.
இதனையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி களைக்கட்டியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நடிகர் சிம்பு நுழைந்து போட்டியாளர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். பட்டாசு வெடிக்க, மேள, தாளத்துடன் அவரை பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவேற்றனர்.
இதோ வைரல் வீடியோ -
#BBUltimate இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 10, 2022
▶ 6:30 pm Onwards..#Day70 #Promo3 #GrandFinale only on #disneyplushotstar pic.twitter.com/wYp78V4kP3
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan